gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஓம்நமசிவய!

புண்ணியநாதா போற்றி!
பூத விநாயகா போற்றி!
பெருச்சாளி வாகனா போற்றி!
பொல்லாப் பிள்ளையே போற்றி!


.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி/விஷபாகரண மூர்த்தி!

 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் இருதரப்பிலும் பலர் மடிந்தனர். எனவே அவர்கள் இரு தரப்பினரும் பிரம்மனிடம் கலந்து ஆலோசித்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க முடிவெடுத்தனர். மந்தார மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடையும்போது அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கமும் தேவர்கள் பாம்பின் வால் பக்கமும் இருக்க மந்தாரமலை சிறிதும் அசையாமல் கடலினுள் மூழ்கத் தொடங்கியது. அனைவரும் திகைக்க திருமால் ஆமை வடிவமெடுத்து மந்தாரமலையின் அடிப்பாகம் சென்று அதைத் தாங்கிக் கொண்டார். மீண்டும் கடையத் தொடங்கினர்.
பலகாலம் கடைந்ததால் கயிறாக இருந்த வாசுகி வருத்தம் ஆற்றாது தன் வாயினால் நஞ்சைக் கக்கியது. அந்த நஞ்சு பரவ ஆரம்பித்ததும் உலகை இருள் சூழ்ந்தது. அந்த நஞ்சைக் கட்டுப்படுத்த திருமால் முன்னே செல்ல அவர் உடல் கருநீலமானது. அனைவரும் சிவனை தஞ்சமடைந்தனர். சிவன் சுந்தரரிடம் அந்த நஞ்சை திரட்டி வருமாறு பணித்து அதை கையில் வாங்க அது சிறுத்தது. அதை சிவன் தன் வாயில் போட அருகில் இருந்த உமை அவர் கண்டத்தைப் பிடிக்க அந்த நஞ்சு சிவபெருமானின் கண்டத்திலேயே நின்றது. கண்டம் நீலமாக சிவபெருமான், நீலகண்டர், மணிகண்டர், சீகண்டர் என்ற பெயரைப் பெற்றார். மீண்டும் பாற்கடல் கடைந்து அமிர்தம் கடைந்தெடுக்கப் பட்டது.
மூன்று கண்களுடன், சடாமகுடம் தரித்தவராய், கரங்களில் மான், மழு, ஒருகரத்தில் நஞ்சு, ஒரு கரம் அருள் குறிப்பு, பர்வை நஞ்சின் மீதிருக்க இடதுபுறம் பார்வதி அவரைத் தடுக்கும் வண்னம் நின்ற நிலையில் இருப்பார்கள்.
ஆணவம் நீங்கி அமைதி உண்டாக திருக்கடைக்கண் அருள்பவர். அனைத்து உயிர்களும் துன்பம் அடையாமல் இருக்க நஞ்சை உண்ட பெருமான் வடிவம் நீலகண்டர். காட்சி: கழுகுமலை வெட்டுவான் கோவில் விமானம், மதுரை நந்தி மண்டபத் தூண், சுருட்டப் பள்ளியில் பள்ளிகொண்டவராக காட்சி.

#####

ஓம்நமசிவய!

பிரசன்ன விநாயகா போற்றி!
பிரணவப் பொருளே போற்றி!
பிள்ளையாரே போற்றி!
பிறையெயிற்றோனே போற்றி


தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!

பிரம்மன் தன்னுடைய படைக்கும் தொழிலுக்கு உதவிசெய்ய சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரை தோற்றுவித்தார். அவர்கள் பிரம்மனுக்கு உதவி செய்யாமல் சிவனை நோக்கி தவம் செய்தனர். மகிழ்ந்த சிவனிடம் தங்களுக்கு மெய்ப் பொருளை உபதேசித்து ஞானம் பெற அருள்புரியக் கேட்க சிவனார் ஞான குருவாக- தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து குருவாகி அவர்கள் நால்வருக்கும் சொல்லாமல் சொல்லும் உபதேசம் உபதேசிக்கத் தொடங்கினார்.
சிவபெருமானின் யோக, போக, வேதத் திருவடிவங்களில் தென்முகக் கடவுள் யோக வடிவம். தட்சிணம் என்றால் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் எனப்படும். தெற்கு அழிவைக் குறிப்பது. வடக்கு அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மா வடக்கு நோக்கி வழிபட ஏதுவாக இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள் புரிகின்றான். ஆனந்த வடிவமான ஆடல் வல்லானும் அமைதி வடிவான தென்முகக் கடவுளும் தெற்கு நோக்கியே அருள் புரிகின்றனர். நிழல் மரங்களில் ஆல் தலையானது. ஆலின் கீழ் இலிங்கம் நிறுவப்பட்டமையால் ஆலமர் கடவுள் / ஆலமர் செல்வர் என்றானார்.
தட்சினாமூர்த்தி ஆச்சாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். பொருளுக்கேற்ப கற்பிக்கும் முறை அமையும். மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத பரம் பொருளை மனதிற்கு கட்டுப்பட்ட வாக்கால் காட்ட முடியாது. அனுபூதி வடிவில் உள்ளத்திற்குச் சொல்லாமல் விளக்கம் தர இயலாது. எந்த செயலுமற்ற மௌனத்தைக் கடைபிடித்து ஆனந்தத்தை அனுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்தி சலனமற்றுத் தம்மிடம் கலந்துள்ள சீடர்களின் உள்ளத்தில் அவ்வானந்தம் முழுவதும் பரவச் செய்து பேரின்ப நிலையை உணர்த்தும் பரம்பொருளின் வடிவமே தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி வடிவம். அறியச் சக்தி பெற்றவர் மட்டுமே அறியுமாறு போதித்த வடிவம். சிவத்திடம் சக்தி அடங்கிய வடிவம். ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம். பேரானந்தத்தை வெளிப்படுத்தாமல் உள்ளடக்கிக் கொள்ள திறமை வேண்டும். அந்த திறமை சாமர்த்தியம் மிக்கவர் தட்சிணா மூர்த்தி.
திருமேனி பளிங்கு போன்ற தூய்மையை உணர்த்தும் வெண்ணிறம். அறியாமையைக் குறிக்கும் முயலகனை மிதித்திருக்கும் வலது பாதம் அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை. உயிர்களை உய்விக்க சிவஞானபோதமாகிய ஞானங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழும் சிவ ஞான போதமாகிய திருக்கரத்திலுள்ள நூல், 36 / 96 தத்துவங்களை உணர்த்த திருக்கரத்தில் உள்ள உருத்திராக்க மாலையினால் திருவைந்தெழுத்தை உருவேற்றி தியானைத்தலே ஞானம் பெறும் வழி, அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்கும் இடக்கையில் உள்ள ஆற்றல்மிக்க அமிர்த கலசம். ஞானத்தின் அடையாளமான சின் முத்திரை- பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டு விரல் தொடவும் ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் ஞானத்தின் அடையாளம், தீய சக்திகளை அடக்கியாளும் பேராற்றல் உணர்த்தும் புலித்தோலின் மீது அமர்தல், ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் புலனடக்கம் உடையவராய் ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்துவதே துறவியின் சிறப்பு என்பதை உணர்த்தும் நெற்றிக்கண், மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்தும் ஆலமரமும் அதன் நிழலும், பக்தர்கள் வடக்கு நோக்கி தியானிக்க வேண்டுமென்பதற்காக தென்முகம், குண்டலினி சக்தியை குறிக்கும் பாம்பை அணிந்திருப்பது, தருமத்தை குறிக்கும் வெள்விடை, அனைத்து உயிர்களுக்கும் தந்தை என்ற பசுபதி நிலைபாட்டை விளக்க சூழ்ந்திருக்கும் விலங்கினங்கள்.
தட்சிணாமூர்த்தியை வியாக்கிண தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணா மூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி என பலவகையாக சிறப்பாகக் குறிப்பர். ஆலமரத்தடியில் புலித்தோல் அல்லது வெள்ளைத் தாமரையில் அமர்ந்து, வலது கால் கீழே தொங்கிய நிலை, இடது கால் மடிந்தவாறும் நான்கு கைகளில் முன்னுள்ள ஒரு கையில் உருத்திராக்க மாலை, மற்றொருகையில் தீ அல்லது பாம்பு, உடல் வளைவின்றி நிமிர்ந்த நிலை, சடை மகுடம், அதில் எருக்கம்பூ, பாம்பு, சிறுமணி, கபாலம், பிறைச்சந்திரன், கங்கை அணிய, இடக்காதில் அங்க பத்திரமும் வலக்காதில் குண்டலமும், கழுத்தில் உருத்திராக்க மாலையுடன், வெண்ணிற மேனி கொண்டவர். பார்வை பாதம் நோக்கி இருக்கும்.
தன்பால் அன்பும் உலகத்தின்பால் உவப்பும் உண்டாக்குவார். ஞான யோக நெறியை சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்களுக்கு கற்பிக்கும் பாங்குடன் உலக மக்களுக்கு கற்பித்தருளும் வடிவம்-தட்சிணா மூர்த்தி-ஆலமர்செல்வர்/ தென்முகக் கடவுள்!. காட்சி சிறப்பு: திரு இரும்பூளை (ஆலங்குடி), பட்டமங்கலம்(திருப்புத்தூர்), திருச்சி மலைக்கோட்டை, திருவொற்றியூர்( சென்னை), வள்ளலார் கோவில் (மயிலாடுதுறை), திருவானைகா, திருநாவலூர், திரு முண்டீசுவரம், இலம்பையங்கோட்டூர், தியாகசமுத்திரம், திருநெடுங்களம், திருவிடைசுழி, திருவையாறு, திருப்புனவாயில், சிதம்பரம், காஞ்சி கயிலாசநாதர், அறப்பளீசுவரர் (கொல்லிமலை)

#####

வியாழக்கிழமை, 07 September 2017 18:48

வீரபத்திரர்!

ஓம்நமசிவய!

பாதாள விநாயகா போற்றி!
பார்வதி மைந்தா போற்றி!
பாலசந்திர விநாயகா போற்றி
பால விநாயகா போற்றி


வீரபத்திரர்!

காசிபர் முனிவருக்கு திதி, அதிதி மூலம் பிறந்தவர்கள் தேவர்கள் மற்றும் அசுரர்கள். இருதரப்பினரும் சகோதர்களாக இல்லாமல் தீராப்பகைக் கொண்டு போர் புரிந்து வந்தனர். இந்திரன் அசுரர்களை வெற்றி கொண்டு போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் வீரமார்த்தாண்டன் என்ற அசுரனே தேவர்களை வெல்லக் கூடியவன் என்று அவனை அழைத்து பிரமதேவனை நோக்கித் தவமிருக்கச் செய்தார். வீரமார்த்தாண்டன் தவமிருந்து மூன்று உலகங்களிலும் தன்னை வெல்ல யாருமில்லாதபடி அரசாள வரம் வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்றதும் அகந்தை கொண்டு தேவர்கள் மீது போர்தொடுத்து வெற்றி பெற்று இந்திரனை துரத்திவிட்டு தேவருலகத்தை தானே ஆட்சி செய்தான். தேவமாதர்கள், எண்திசைக் காவலர்கள் ஆகியோரைத் துன்புறுத்தி, பசுக்களைக் கொன்று, முனிவர்கள் செய்யும் வேள்விகளைச் சிதைத்தான். தேவர்கள் வீரமர்த்தாண்டனை எப்படி ஒழிப்பது என ஆலோசனை நடத்த, அதை அறிந்த வீரமார்த்தாண்டன் அவர்களைக் கொல்லத் துரத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார்கள்.
பெருமான் வீரபத்திரரை அழைத்து வீரமார்த்தாண்டனை அழிக்க கட்டளையிட வீரபத்திரர் படையுடன் சென்று அவனை கொன்றார். இந்திராதி தேவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களைத் தீர்த்து அசுரர் தலைவன் வீரமார்த்தாண்டனை அழிப்பதற்கு சிவன் அம்சமாக உருவானவர்- வீரபத்திர மூர்ர்த்தி..

#####

வியாழக்கிழமை, 07 September 2017 18:43

கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!

ஓம்நமசிவய!

பக்தி விநாயகா போற்றி!
பஞ்சபூத விநாயகா போற்றி!
பாகீரத விநாயகா போற்றி!
பாசாங்குச விநாயகா போற்றி!


கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!

நான்முகனிடமிருந்து இறப்பில்லா ஆயுளும், வல்லமையும், வெற்றியும் அடைய தவமிருந்து சிவபிரானைத் தவிர என்ற நிபந்தனையுடன் வரம் பெற்றான். யானை வடிவு கொண்ட கயாசூரன் பிரம்மனிடம் வரம்பெற்ற கர்வத்தால் எல்லோரிடமும் போர் தொடுத்து துன்புறுத்தத் தொடங்கினான். இந்திரனின் ஊர்தி ஐராவதத்தின் வாலைப் பிடித்து சுழற்றி அடித்தான். அக்கினி, யமன், நிருதி ஆகிய எண்திசைக் காவலர்களை வென்றான். பின் தன் குலத்தினரையும் துன்புறுத்த தொடங்கினான். அருந்தவத்தோர் காசி சென்று இறைவனிடம் கயாசூரனைப் பற்றிக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.
அருதவத்தோர் காசி சென்றதை அறிந்து காசிக்கு வந்த கயாசூரன் நான்முகனின் எச்சரிக்கையை மறந்து சிவனின் இருப்பிடத்திற்கு வந்தான். பேரிரைச்சலுடன் பெருமானை எதிர்த்தான். சிவன் தன் காலால் அவனை உதைத்துத் தள்ளி விழியால் தீப்பொறி கக்கி யானை உடல் கொண்ட கயாசூரனது தோலை உரித்தார்.
யானை வடிவங்கொண்ட கயாசூரனை அழித்த வடிவம்-கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி!. நிகழ்வு நடந்த தலம்.:காசி (கீர்த்திவாசேசுவரர்)

#####

வியாழக்கிழமை, 07 September 2017 11:45

திரிபுராந்தகர்!

ஓம்நமசிவய!

நர்த்தன விநாயகா போற்றி!
நவசக்தி விநாயகா போற்றி!
நித்திய கணபதியே போற்றி!
பஞ்சமுக விநாயகா போற்றி!


திரிபுராந்தகர்!


வரங்களால் பலம் பெற்ற வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை அமைத்து அக்கோட்டைகளுடன் எவ்விடத்தும் செல்லும் ஆற்றல் பெற்று உலகிற்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தனர். விண்ணோர்கள் ஒன்று கூடியும் அவர்களை அழிக்க முடியவில்லையாதலால் சிவனிடம் வேண்டினர். சிவன் அக்கோட்டைகளை தகர்த்தெறிய திருவுளம் கொண்டார் எல்லா கடவுளும் தங்களின் ஆற்றலில் பாதியை சிவனுக்கு அளிக்க முன்வந்தனர்.
அனைவரும் சேர்ந்து உருவாக்கிய தேரில் பூமி தட்டானது. சூரிய சந்திரர்கள் சக்கரங்களாயினர். வேதங்கள் குதிரைகளாயின. மேருமலை வில்லானது. வாசுகி நாணாகியது. திருமால் அம்பானார். அக்னியே அதன் முனை. இமயன் அதன் இறகு. நான்முகன் தேரோட்டியானார். போருக்குப் புறப்பட்ட பெருமான் தேரில் ஏறி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கினார். பெருமானுடைய வலக்கால் சிறிது முன்னேயும், இடக்கால் சற்று வளைந்து பின்னேயும் அம்பெய்ய அமைந்த நிலை. நான்கு கரங்களில் வலக்கரங்களில் சிம்மகர்ணமுத்திரையில் அம்பு பூட்டிய வில்லின் நாணைப் பற்றியிருக்கும், இடக்கரங்களில் ஒன்று வில்லைப் பற்றியிருக்கும், மற்றொரு வலக்கரம் டங்கத்தையும், இடக்கரம் மானையும் பற்றியிருக்கும். சடாமகுடம் அணிந்து இடப்பக்கம் உமையுடன் இருப்பார். திரிபுரம் எரித்தபோது ஆடிய ஆடல் கொடுகொட்டி பாண்டரங்கம் எனப்படும்.
தூலம், சூக்குமம், காரணம் என்ற மூவகை உடல்களையும் அவற்றிற்கு காரணமாய் அமைந்த ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அழித்து இறைவன் நமக்கு அருள் செய்யும் திறத்தினையே அறிவுறுத்தும் வடிவம். மாறுபட்ட ஆன்மாக்களை வசப்படுத்தும் முக்குணங்களை மாற்றுவார். முப்புரங்களை எரித்து சாம்பலாக்கிய திரிபுராந்தகர் வடிவம். நிகழ்வு நடந்த தலம்: திருவதிகை. காட்சி: திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி. காஞ்சி கயிலாசநாதர்,

#####

வியாழக்கிழமை, 07 September 2017 11:40

சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!

ஓம்நமசிவய!

தும்பிக்கை நாதா போற்றி!
துளைக்கர விநாயகா போற்றி!
தேசிய விநாயகா போற்றி!
தொப்பக் கணபதியே போற்றி!


சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!


இறை அருள் இருந்தால்தான் இன்பமாக வாழலாம். அகந்தை தலை தூக்கினால் அல்லல்கள் ஏற்படும். இறையருளால்தான் இடர் நீங்கப் பெறும். இந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு கயிலை சென்றான். இந்திரன் ஆணவத்துடன் வருவதை அறிந்த சிவன் தானே வயிற்காப்போனாய் நின்றார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல் இருக்க கோபங்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் அக்காவலனை அடிக்க வஜ்ராயுதம் பொடிப் பொடியானது கண்டு அதிர்ச்சியடைந்தவன் முன் சிவன் தோன்ற தன்னை மன்னிக்க வேண்டினான். அவனை மன்னித்து தன்னிடம் தோன்றிய கோபக் கனலைக் கடலில் எறிந்தார்.
கடலில் விழுந்த கோபக் கனல் ஒரு குழந்தையாக மாறி நீரால் வளர்க்கப் பட்டமையால் அதற்கு சலந்திரன் என பிரம்மன் பெயரிட்டார். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை மணம் செய்துகொண்டு வாழ்ந்தான். தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான். திருமால் பல காலம் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் அவனைப் பாராட்டியதைக் கண்ட இந்திரன் மிகவும் பயந்து கயிலையில் தங்கியிருந்தான். இதை அறிந்த சலந்திரன் கயிலைக்குப் புறப்பட்டான்.
தேவேந்திரன் சிவபெருமானை சரன் அடைந்தான். பெருமான் ஒரு வயோதிகர் உருவெடுத்து ஊன்றிய தடியுடன் கையில் கமண்டலமும் கொண்டு தேவேந்திரனை பின்வரச் சொல்லி தான் முன் நடந்தார். வழியில் சலந்தரனைக் கண்டவர் நீ யார் எனக்கேட்டார். நான் கடல் அரசனின் மகன். என்பெயர் சலந்திரன், நான் சிவபெருமானிடம் போர் புரியச் செல்கின்றேன் என்றான். பெரியவர் சிவனுடன் சண்டை செய்தால் நொடிப்பொழுதில் மரணமடைவாய் .உடனே இங்கிருந்து போய்விடு என்றார். ஒரு நொடிப்பொழுது தங்கியிருந்து என் ஆற்றலைக் காணுங்கள் என்றான் சலந்திரன்.
நான் உன் வல்லமையைக் காணத்தான் வந்தேன். என்று கூறி தன் காலால் ஒரு சக்கரத்தை வரைந்து இந்த வளையத்தை உன் தலைமேல் தூக்கிவைக்க முடியுமா? எனக் கேட்டார். என்ன முயற்சி செய்தும் சலந்திரனால் முடியவில்லை. தன் முழு ஆற்றலையும் உபயோகப்படுத்தி அந்த சக்கரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தலைமேல் வைத்ததும் அது அவனை இரு கூறாக்கியது. அசுரப்படையை தீயினால் சாம்பலாக்கினார்.
பின் இரு கரங்களில் மழு, மான், முன் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் கத்தரி முத்திரையுடன் இருப்பார். கோபக்கனலை அழித்து மனம் அமைதிபெறச் செய்வார். தன் கோபக்கனலில் உருவான சலந்திரன் தேவர்களுக்கு தீரா துயர் விளைவித்ததால் தன் பாதத்தினால் நிலத்தில் சக்கரம்கீறி அதனைக் கொண்டு சலந்திரனை அழித்த வடிவம்*சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி!. நிகழ்வு நிகழ்ந்த தலம்: திருவிற்குடி

#####

ஓம்நமசிவய!

திரிமுக விநாயகா போற்றி!
துங்கக் கரிமுகனே போற்றி!
துண்டி விநாயகா போற்றி!
துன்முக விநாயகா போற்றி!


காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!


இறப்பு பற்றிய எண்ணமே மனிதனை தத்துவ நெறிக்கு அழைத்துச் செல்லும். தோற்றம் உண்டேல் மரணம் உண்டு என்பது வெள்ளிடைமலை. காலகால மூர்த்தி காலனிடமிருந்து நம்மைக் காப்பவர்.
மணல்மேடு என்ற ஊரில் கவுசிக முனிவரின் மகன் மிருகண்டு முனிவர் தம் மனைவியருடன் வாழ்ந்து வந்தார். மகப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிய குறைந்த அறிவும் நீண்ட ஆயுளும் கொண்ட மகன் வேண்டுமா அல்லது நல்லறிவும் நற்குணங்களும் கொண்ட பதினாறு வயதுவரை வாழும் மகன் வேண்டுமா என இறைவன் கேட்க நிறைந்த அறிவுள்ள மகனே வேண்டும் எனக் கேட்க மார்க்கண்டேயன் பிறந்தான். தனக்கு பதினாறு வயது நிரம்பும் அளவில் தன் ஆயுளைப் பற்றிய குறையை அறிகின்றான்.
பெற்றோர் அனுமதியுடன் திருக்கடவூருக்கு வந்து அமிர்தகடேசரை வழிபட்டு வர, குறித்த பதினாறு வயது நிரம்பியதும் உயிரைக் கவர காலன் வர மார்க்கண்டேயன் அச்சம் கொண்டு திருமேனியைக் கட்டிப்பிடிக்க லிங்கத்துடன் பாசக்கயிறை வீசிய காலனை தனது இடது காலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக வாழ அருள் புரிந்தார்.
மூன்று திருக்கண்களுடன் நான்கு கரங்கலுடன் கூரிய பற்களுடன் திகழ்வார். வலபக்க ஒரு கரத்தில் சூலம் காதுவரை உயர்ந்தும், மற்றொரு கரத்தில் பரசு / அருட் குறிப்பும், இடப்பக்க முன் கரத்தில் சூசி குறிப்புடன், பின்கரம் விசுமய முத்திரையுடன்- வியப்பினை உணர்த்தும் குறிப்புடன் இருக்கும். வலது கால் தாமரையிலும், இடது கால் எமனுடைய தலையிலும் இருக்கும்.
துன்பங்கள் அனைத்தையும் துடைத்து அபயம் அருளுபவர், மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த வடிவம்-காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி!. வீரட்டம் புரிந்த நிகச்சியான இது நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். காட்சி: பட்டீசுவரம், திருச்செங்காட்டாங்குடி. மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்.

#####

வியாழக்கிழமை, 07 September 2017 11:26

காமாந்தகர், காமதகனமூர்த்தி!

ஓம்நமசிவய!

ஞான விநாயகா போற்றி!
தந்திமுக விநாயகா போற்றி!
தத்துவ விநாயகா போற்றி!
தருண கணபதியே போற்றி!


காமாந்தகர், காமதகனமூர்த்தி!


தக்கனின் யாகத்தை வீரபத்திரர் அழித்தபின் கயிலையில் இறைவனைத் தொழுத அம்பிகை தக்கனின் மகளாக இருந்த உடலையும் பெயரையும் விரும்பவில்லை அவை நீங்க அருள் புரியக் கேட்டாள். இமவான் என்ற மலையரசன் விருப்பிற்கேற்ப அவர் மகளாகப் பிறக்க அருள் புரிந்தார். இமவான் அக்குழந்தையை பார்வதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
கயிலையில் அம்பிகையைப் பிரிந்த சிவன் மோன மூர்த்தியாகி யோகியாக தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொல்லாமல் சொல்லும் ஞான குருவாக எழுந்தருளியிருந்தார். அந்தக் கணம் தேவர்களுக்கும் மக்களுக்கும் பலயுகங்களாயின. பெருமான் உமையைப் பிரிந்து இருந்ததால் உயிர்கள் ஆண்பெண் உறவின்றி தவித்தன. உலக வளர்ச்சி தடைப்பட்டது.
இந்நிலையில் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் பிரமனுடன் கலந்தாலோசிக்க சிவன் பார்வதியை மணந்து ஒரு குமரனை அளிக்க சிவனின் தவநிலை கலைய வேண்டும் என முடிவெடுத்தனர்.
காமநினைவை உண்டாக்கும் தமரைப் பூ, உடலின் நிறத்தைப் பசலையாகும் மாம்பூ, வேறு உணர்வை நீக்கும் அசோகப் பூ, மயங்கச் செய்யும் முல்லைப் பூ, விரகதாபத்தால் ஆளைக் கொல்லும் நீலோற்பலப் பூ என்ற ஐந்து மலர் கனைகளை கரும்பு வில்லுடன் தென்றல் தேர்கொண்ட மன்மதனை சிவனின் தவநிலையைக் கலைத்து காமப்பற்றை விளைவிக்க இந்திரன், நான்முகன், திருமால் தேவர்கள் ஆகியோர் முடிவடுத்து மன்மதனை அனுப்பினர். நந்திதேவர் அனுமதிக்க மேற்புறம் சென்று இறைவன் மீது ஐந்து மலர்க் கனைகளையும் எய்தினான்.
மலர்கனைகள் மேனியில் பட்டதும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க அத்தீயில் காமன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி இரதிதேவி சிவனிடம் தனக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டியதால் மன்மதனை அருவமாய் தன் தொழில் செய்ய அருள் புரிந்தார். மன்மதன் (மாரன்) - அனங்கன் தன் மனைவிக்கு மட்டும் உருவுடன் தோற்றமளிப்பான். உயிர்பெற்று எழுந்த மன்மதன் பலதலங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டான். (வில்லியனூர் காமேச்வரம், பூவாளூர் மன்மதேச்வரம், குத்தாலம் மன்மதேச்வரம், காஞ்சி காமேச்வரம் எனப்படும்)
காமனை எரித்ததால் காமதகன மூர்த்தி எனப்பட்டார். யோக தட்சிணா மூர்த்தி வடிவத்துடன் காமனின் வடிவமும் சேர்ந்து காணப்படும். சிவனுக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும், சடைமகுடம், கையில் நாகம், அக்கமாலை, கடகக் குறிப்பு, சூசிக் குறிப்பு ஆகியவற்றுடன் இருப்பர். சிவனின் உருவில் காமன் அரை பங்காக இருப்பர். பொன்மஞ்சள் நிற காமனுடன் இரதி, தேவபாகா, வசந்தா ஆகியோருடன் கையில் கரும்பு வில்லும் ஐவகை கனைகளும் இருக்கும்.
மெய்ஞானம் தோன்றச் செய்து திருவடியைச் சாரும் பக்குவம் உண்டாக்குவார். உலக நலனுக்காக தேவர்கள் வேண்டுதலுக்காக சிவன்மேல் காமகணை தொடுத்த மன்மதனை எரித்த வடிவம்*காமதகனமூர்த்தி. காட்சி: காஞ்சி-ஏகாம்பரேஸ்வர்ர், கங்கை கண்ட சோழபுரம்,

#####

ஓம்நமசிவய!

சுந்திர விநாயகா போற்றி!
சுமுக விநாயகா போற்றி!
சுமங்கல விநாயகா போற்றி!
செல்வ விநாயகா போற்றி!


பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்/ கபாலி!


தவத்தில் சிறந்த தாருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர்.
பிச்சை உகக்கும் பொம்மான் இடக்காலை ஊன்றி வலக்காலை வளைத்து நடந்து செல்லும் குறிப்பை உணர்த்தி நான்கு கைகளில் முன்வலது கையிலுள்ள அருகம் புல்லால் மானை ஈர்த்தும், பின் வலக்கை உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும், பின் இடக்கையில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கையில் பிரம்ம கபாலமாகிய பிச்சைப் பாத்திரம் கொப்பூழ்வரை உயர்ந்திருக்க, ஆடையேதுமின்ரி இடையில் பாம்பை அரையாக அணிந்து விலங்குவார், தலையில் சடாபாரம், நெற்றியில் படமும் முக்கண்ணும் உடைய நீலகண்டராக காண்பார். வலக்காலில் வீரக்கழல், திருவடிகளில் பதுகையாக வேதங்கள், வலப்பக்கம் ஒரு மானும் இடப்பக்கம் ஒரு குறட்பூதமும் காணப்படும்.
சம்சாரப் பற்றினைப் போக்குபவர். உயிர்களின் உய்திக்கு தன்பால் பக்தி கொண்ட அடியவர்களின் வினைப் பயனாகிய தீ வினைகளை- பாதகங்களை உண்ணுஞ் சோறாகப் பெறுபவர் என்ற தத்துவக் கோலம். தருகாவனத்து முனிவர்கள் அவரின் பத்தினிகளின் செருக்கை அடக்க கொண்ட வடிவம் பிட்சாடனர்.
காட்சி: காஞ்சி, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு, குடந்தை,வழுவூர், பந்த நல்லூர் ஆகியத் தலங்கள்.

#####

வியாழக்கிழமை, 07 September 2017 11:09

ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி!

ஓம்நமசிவய!

சித்தி புத்தி விநாயகா போற்றி!
சிந்தாமணி விநாயகா போற்றி!
சிந்தூர விநாயகா போற்றி!
சிவசக்தி விநாயகா போற்றி!


ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி!


அகண்ட ஜோதியாய் புலன்களுக்கு எட்டாதவராய் அனைத்து உயிர்களும் ஒடுங்கக்கூடிய இடமாக இருப்பவர். கருத்துக்களுக்கு எட்டாதவர். மாறுதல் இல்லாதவர். கருணையின் பிறப்பிடமாய் திகழ்பவர். எல்லா ஆன்மாக்களும் ஆணவ மலத்தில் அழுந்திருப்பதனால் ஆன்மாவின் அற்புதத்தை அறியும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவற்றைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும், மறைத்தும், அருள் புரிந்தும் செய்து உலக உயிர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்து இயங்க வைக்கின்றார். சதா உறங்குபவனுக்கு உலகத்தைப் பற்றி ஏதும் தெரியாது. உலகத்து மக்களின் மீது வைத்த கருணையால் ஆன்மாக்களை விழிப்படையச் செய்கின்றார். பேரூழிக் காலத்தில் அனைத்து உயிரினங்களும் பெருமானிடம் ஒடுங்க அவர் மட்டும் அழியாமல் இருப்பார். தனித்து நிற்கக்கூடிய வல்லமை பெற்றவர்.
பின் வலக்கரத்தில் சூலம், இடக்கரத்தில் மழு, முன்வலக்கையில் காக்கும் குறிப்பு, இடக்கை அருளும் குறிப்பும் கொண்டு புலித்தோல் உடுத்தி, சடையில் சந்திரன், கங்கை அணிந்து இருப்பார்.
மனம், ஞான நிஷ்டையை விரும்ப அருள்வார். வேதங்கள் நான்கையும் புரிந்து கொள்ளும் அறிவினை அளிப்பார். அனைத்து சங்கார காலத்திலும் அனைவரும் இலயமடையவும்-இறக்கவும், எல்லா உலகங்களும் அவர் திருவடியில் கீழ் நிற்பதாலும், ஏகபாத மூர்த்தி, காட்சி- மதுரை, தப்புளாம் புலியூர் (திருவாரூர்), திருவானைக்கா, திருவெற்றியூர்

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27100246
All
27100246
Your IP: 3.145.42.94
2024-04-28 01:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg